வாட்ஸ் அப் குரூப்பில் உங்களை இணைக்க முடியாத வகையில் செய்ய வேண்டுமா?

வாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளம் உண்மையில் நமக்கு கிடைத்த டெக்னாலஜி பொக்கிஷம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அதில் இருக்கும் ஒருசில வசதிகளால் நமக்கு தொல்லைகளாக இருப்பதும் உண்மை. குறிப்பாக நம்மிடம் அனுமதியே பெறாமல் நம்முடைய பெயரை வாட்ஸ் அப் குரூப்பில் இணைப்பதன் மூலம் நமக்கு தேவையில்லாத பல மெசேஜ்கள் வந்து தொல்லை கொடுக்கின்றன. 

கடி ஜோக், கடுப்படிக்கும் பாடல்கள், தேவையில்லாத காலை வணக்கம் போன்ற மெசேஜ்கள் நமக்கு இடைஞ்சலை தருகின்றன என்பது உண்மை. இருப்பினும் இந்த வாட்ஸ் அப் நிர்வாகம் நமக்கு புதிய வசதி ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி வாட்ஸ் அப் குரூப்பில் நம்முடைய பெயரை இணைக்க முடியாமல் இருக்கும் வசதிதான் அது. அப்பாடா! ஒரு பெரிய நிம்மதி என்று கூறுவது எங்களுக்கு கேட்கிறது. இதை எப்படி செய்வது என்பதை தற்போது பார்ப்போம். 

இந்த விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர் நீங்கள் வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனை லேட்டஸ்ட் அப்டேட்டில் இருக்கின்றீர்களா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். ஓகே இனி வாருங்கள் 
 
  1. உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள்
  2. அதன் பின்னர் செட்டிங் டேப் சென்று அதில் உள்ள அக்கவுண்ட் என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்
  3. பின்னர் அந்த அக்கவுண்ட் செக்சனில் உள்ள பிரைவசி என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்
  4. அதில் உள்ள குரூப்ஸ் என்ற டேப்-ஐ க்ளிக் செய்யுங்கள்
  5. இதில் உங்களுக்கு மூன்று ஆப்சன்கள் தோன்றும். அவை எவ்ரிஒன், மை காண்டாக்ட்ஸ் மற்றும் நோபடி
  6. இந்த மூன்று ஆப்சனில் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆப்சனை தேர்வு செய்து கொள்ளலாம்

இதில் நீங்கள் நோபடி என்பதை தேர்வு செய்துவிட்டால் உங்களை எந்த குரூப்பிலும் யாராலும் இணைக்க முடியாது. மேலும் இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ்கள் மூலம் நீங்கள் தேவையில்லாத குரூப்பில் இணைக்கப்படுவதை தவிர்க்கலாம்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0