IPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது?

இந்த உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டில் உங்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்.

IPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது?

இந்த உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டில் உங்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்.

FaceTime வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகளை செய்வது மிகவும் இலகுவானது.

ஐபோன், ஐபாட், ஐபாட் டச் மற்றும் மேக், மற்றும் FaceTime உள்ள அனைத்திலும் ஒருங்கிணைந்த FaceTime பயன்பாட்டை பாவிக்க முடியும். உங்கள் மீது அக்கறை உள்ள அனைவரும் உங்களுக்கு முன்னால் நிற்பது போன்று உணர்வீர்கள்.

எப்படி உங்கள் ஐபோன் அல்லது ஐபாட்டில் இருந்து  FaceTime ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு செய்வது என்பதனை பார்வையிடுவோம்...

FaceTime

FaceTime

  1. உங்கள் iPhone அல்லது iPad இல் FaceTime ஐ திறக்கவும்.
  2. + பொத்தானைத் தட்டவும்.
  3. நீங்கள் அழைக்க விரும்பும் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது எண்ணை உள்ளிடவும்.
  4. குழு அழைப்பை உருவாக்க விரும்பினால், மேலும் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி அல்லது எண்களை உள்ளிடவும்.
  5. உங்கள் அழைப்பைத் தொடங்க ஆடியோ அல்லது வீடியோவைத் தட்டவும்.

 

உங்கள் மேக் ஊடாக FaceTime ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு மேற்கொள்வது எவ்வாறு?

FaceTime Mac

FaceTime Mac

  1. உங்கள் மேக் ஊடாக FaceTime ஐ திறக்கவும்.
  2. நீங்கள் அழைக்க விரும்பும் நபரின் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் உள்ளிடவும்.
  3. குழு அழைப்பை உருவாக்க விரும்பினால், மேலும் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி அல்லது எண்களை உள்ளிடவும்.
  4. உங்கள் அழைப்பைத் தொடங்க ஆடியோ அல்லது வீடியோவைக் கிளிக் செய்க.

 

வழக்கமான அழைப்பிலிருந்து ஐபோன் FaceTime ஊடாக எவ்வாறு அழைப்பினை எற்படுத்துவது?

FaceTime

  1. தொலைபேசி அழைப்பில் இருக்கும்போது தோன்றும் அழைப்பு மெனுவைப் பாருங்கள்.
  2. FaceTime வீடியோ அழைப்பைத் தொடங்க FaceTime பொத்தானைத் தட்டவும்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow