உங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி?
கூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராக கூகுள் க்ரோம் இருக்கிறது. இது மிகவும் பயன்தரும் ஆண்ட்ராய்டு பிரவுசராகும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பாதுகாப்பிற்கும் கூகுள் அதிகளவு கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராக கூகுள் க்ரோம் இருக்கிறது. இது மிகவும் பயன்தரும் ஆண்ட்ராய்டு பிரவுசராகும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பாதுகாப்பிற்கும் கூகுள் அதிகளவு கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இந்நிறுவனம் பேட்லாக் எனும் அதிக பிரபலமான அம்சத்தை வழங்குகிறது. இது நாம் பயன்படுத்தும் பிரவுசர் பாதுகாப்பானது தானா என்பதை சரிபார்க்கும். இது எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்பதால், மற்ற வலைதளங்கள் நம் டேட்டாவை திருடுகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
உங்களது டேட்டாவை மற்றவர்கள் திருடுகின்றனரா என்பதை க்ரோம் மூலம் அறிந்து கொள்வது எப்படி?
#1 - க்ரோமில் அதிகளவு டேப்களை திறந்து பிரவுசிங் செய்யும் போது, டாஸ்க் பாரில் எத்தனை டேப்கள் திறந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். போலியான டாஸ்க் பார்கள் தவறான எண்ணிக்கையை காண்பிக்கலாம்.
#2 - போலி வலைப்பக்கம் யூசர் இன்டர்ஃபேசில் பெரும்பாலும் தோன்றாது, இதுபோன்ற சூழ்நிலைகளில் அதனை பார்க்க க்ரோம் திறக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனை லாக் செய்ய வேண்டும். பின் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் போது, போலி வலைதளத்தின் யூசர் இன்டர்ஃபேசை பார்க்க முடியும். வலைதளத்தில் இரண்டு டாஸ்க் பார்கள் திறந்திருப்பைதை பார்க்க முடியும். உண்மையான தளம் மற்றும் போலாயனவை அடுத்தடுத்து திறந்திருக்கும்.
#3 - ஆணட்ராய்டு இயங்குதளத்தில் கூகுள் குரோமிற்கு டார்க் தீம் ஒன்று இருக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். டேட்டா திருடப்படுவதை தடுக்க இது சிறப்பான வழிமுறையாகும். டார்க் மோட் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உண்மையான விவரங்கள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். போலியானவை காலியாகவே இருக்கும். இதனை மற்ற மோட்களிலும் கண்டறிந்து கொள்ளலாம். மாற்று தீம்களை இன்ஸ்டால் செய்யும் போது, போலியானவை காலியாக காட்சியளிக்கும்.
ஸ்கிரீன் லாக்
இந்த பிழைகளை சரி செய்து விடலாம், எனினும் இவை உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதனால் பிரவுசிங் செய்யும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்கிரீன் லாக் மூலம் எத்தனை டேப்கள் திறந்து இருக்கிறது என்பதை பார்க்க முடியும். மேலும் புத்தம் புதியடார்க் மோட் கொண்டும் மற்றவர்கள் உங்களின் டேட்டாவை திருடுகின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம். எதுபோன்ற சூழ்நிலையிலும் ஒருவர் எந்த வலைதளத்தையும் 100 சதவிகிதம் நம்ப கூடாது.
What's Your Reaction?






