தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
எந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக . இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

எந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக . இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
(எ.கா: tamil 99 key board, tamil old typewriting keyboard, tamil new typewriting key board.) முதலாவது முறையில் தட்டச்சு செய்ய மேற்சொல்லியிருக்கும் விசைபலகைகளில் ஏதேனும் ஒன்றை கற்றிருக்க வேண்டும். இது கொஞ்சம் சிரமமான வழி ஆனால் சரியான வழி.
இரண்டாவது முறை நம்மை போன்ற சோம்பேறிகளுக்கானது, அது தான் phonetic keyboard முறை. இந்த முறையில் நாம் (amma) என்று தட்டசிட்டாலே (அம்மா ) என்று வந்துவிடும், இதுதான் பலராலும் உபயோகப்படுத்தும் முறையேன்றாலும், கொஞ்சம் தவறான முறைதான். தமிங்க்லீஷில் தட்டச்சு செய்வதற்க்கு இது பரவாயில்லை.
தமிழ் மொழி என்றில்லை, இந்திய மொழி அனைத்திலும் தட்டச்சு செய்வதற்கு அனைவராலும் பரவலாக உபயோகப் படுத்தபடும் மென்பொருள்கள் 3 . அவை,
- Google Input Tools:
இந்த மென்பொருள் கூகிள் குழுமம் தரும் இலவச மென்பொருள். இதன் மூலம் இந்திய மொழிகள் மட்டுமின்றி 22 மொழிகளில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள். இது போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது.
http://www.google.com/inputtools/windows/
இது மைக்ரோசாப்ட் தரும் இலவச மென்பொருளாகும், இது இந்திய மொழிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதுவும் போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.
http://www.bhashaindia.com/ilit/
இது New Horizon Media என்ற நிறுவனத்தால் தரப்படும் இலவச மென்பொருளாகும். இதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற முக்கிய இந்திய மொழிகளை தட்டச்சிடும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக, போனேடிக் மட்டுமல்லாது, இதர விசைபலகைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது பலராலும் விரும்பி பயன்படுத்தப் படுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.
http://software.nhm.in/products/writer
நம்மால் பெரியதாய் தமிழ் மொழியை வளர்க்க முடியாவிட்டாலும், கூடிய மட்டும் தமிழை உயிர்ப்போடாவது வைத்திருக்க பங்களிப்போம்.ஏதேனும் விளக்கம் வேண்டின் கருத்துறையிடுக….. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் 99 விசைப்பலகை.
What's Your Reaction?






