மிகவும் இரகசியமான முறையில் ஜிமெயிலில் மின்னஞ்சலை அனுப்புவது எப்படி?
உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேவையாக கூகுளின் ஜிமெயில் சேவை காணப்படுகின்றது.

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேவையாக கூகுளின் ஜிமெயில் சேவை காணப்படுகின்றது.
இச் சேவையில் பரிமாற்றப்படும் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அல்லது வேறு நபர்கள் பார்வையிடுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.
எனவே மின்னஞ்சல் பெறுநர் மாத்திரம் இரகசியமாகப் பார்வையிடக்கூடிய வகையில் ஒரு வசதி ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது.
இவ் வசதிக்கு Confidential Mode எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல் எவ்வளவு காலப்பகுதிக்கு மாத்திரம் செல்லுபடியானதாக இருக்க வேண்டும் என்பதுடன், பெறுநனரின் தொலைபேசி இலக்கத்திற்கு Passcode எனப்படும் இரகசியக் குறியீடு ஒன்றும் அனுப்பப்படும்.
எனவே Passcode தெரிந்தவர் மாத்திரமே குறித்த மின்னஞ்சலை திறக்க முடியும்.
காரணம் மின்னஞ்சலை திறக்கும்போது Passcode கேட்கப்படும்.
சரியான Passcode வழங்கப்பட்டால் மாத்திரமே மின்னஞ்சல் திறக்கும்.
தவிர Passcode வதியினை தெரிவு செய்யாமல் மின்னஞ்சல் செல்லுபடியாகும் காலத்திரை மாத்திரம் தெரிவு செய்தும் அனுப்ப முடியும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு வழமை போன்று ஜிமெயில் கணக்கினுள் உள்நுழைந்து பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை உள்நுழைத்து உள்ளடக்கத்தையும் தட்டச்சு செய்ய வேண்டும்.
பின்னர் Send பொத்தானுக்கு நேரே காணப்படும் பூட்டுடன் கூடிய மணிக்கூட்டு அடையாத்தினைக் கொண்ட பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது தோன்றும் விண்டோவில் மின்னஞ்சல் செல்லுபடியாகும் கால அளவு, SMS Passcode என்பதை தெரிவு செய்து, பெறுநரின் தொலைபேசி இலக்கத்தையும் வழங்க வேண்டும்.
அதன் பின்னர் மாற்றத்தை சேமித்துவிட்டு மின்னஞ்சலை பாதுகாப்பாக அனுப்ப முடியும்.
What's Your Reaction?






