வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

இன்றைய உலகில் வாட்ஸ் அப் சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய செயலியாக உள்ளது. வாட்ஸ் அப் பிரபலமான பின்னர் எஸ்.எம்.எஸ் போன்ற மெசேஜ்கள் அனுப்புவது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் மல்டிமீடியா, வீடியோ, ஆடியோ மெசேஜ், ஸ்டிக்கர்கள், டாக்குமெண்ட்கள், ஆகியவைகள் அனுப்ப தற்போது பெரும்பாலானோர்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

இன்றைய உலகில் வாட்ஸ் அப் சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய செயலியாக உள்ளது. வாட்ஸ் அப் பிரபலமான பின்னர் எஸ்.எம்.எஸ் போன்ற மெசேஜ்கள் அனுப்புவது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் மல்டிமீடியா, வீடியோ, ஆடியோ மெசேஜ், ஸ்டிக்கர்கள், டாக்குமெண்ட்கள், ஆகியவைகள் அனுப்ப தற்போது பெரும்பாலானோர்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்று போன் அழைப்புகளுக்கும் இந்த வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்து அழைக்கப்படும் அழைப்பு இலவசம் என்பதால் பலர் இதனையே பயன்படுத்துகின்றனர். டிபியில் நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைத்து கொள்வதும், மற்றவர்களின் டிபி மூலம் அவர்களை அறிந்து கொள்ளும் வசதியும் இருக்கும் நிலையில் நமக்கு பிடிக்காதவர்கள், தொல்லை தருபவர்களை பிளாக் செய்யும் வசதியும் இருப்பது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த பிளாக் வசதி மூலம் தேவையில்லாத அல்லது தொந்தரவு செய்பவர்களிடம் இருந்து நாம் தப்பித்து கொள்ள உதவுகிறது. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் நான் ஒரு குறிப்பிட்ட நபரை பிளாக் செய்வது அந்த நபருக்கு தெரியாது என்பதுதான். நாம் ஒருவரை பிளாக் செய்ததை வாட்ஸ் அப் அந்த நபருக்கு நோட்டிபிகேஷன் மூலம் காண்பிக்காது. இருப்பினும் நம்மை யாராவது பிளாக் செய்துள்ளார்களா? என்பதை பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது. 

நம்மை யாராவது பிளாக் செய்துள்ளார்களா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதனை கீழ்க்கண்ட வழிகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

 • உங்களை பிளாக் செய்தவர் ஆன்லைனில் இருக்கின்றாரா? என்பதை நீங்கள் பார்க்க முடியாது.
 • உங்களை பிளாக் செய்தவரின் டிபியை உங்களால் பார்க்க முடியாது.
 • உங்களை பிளாக் செய்தவர்களுக்கு உங்களால் போன் அழைப்பு விடுக்க முடியாது.
 • நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஒரே ஒரு டிக் உடன் க்ரே கலரிலேயே இருக்கும். இரண்டு டிக் தெரிந்தால் தான் நமது மெசேஜ் அந்த நபருக்கு சென்றுவிட்டது என்பது அர்த்தம், ஒரே ஒரு டிக் என்றால் மெசேஜ் செல்லவில்லை என்பதை புரிந்து கொண்டு அந்த நபர் நம்மை பிளாக் செய்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஒரு நபரால் பிளாக் செய்யப்பட்டிருந்தாலும், அந்த நபருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் எப்படி அனுப்பலம் அல்லது அன்பிளாக் செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம் .

இதற்கு நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப் வேறொரு நம்பரில் இருந்து உருவாக்க வேண்டும். அதில் உங்களை பிளாக் செய்தவரின் எண்ணை இணணக்க வேண்டும். மேலும் உங்கள் நண்பர் ஒருவரிடம் ஒரு புதிய குரூப் உருவாக்குமாறு கூறி அவரது குரூப்பில் உங்கள் எண்ணையும், உங்களை பிளாக் செய்தவரின் எண்ணையும் இணைக்க செய்யுங்கள். இப்போது நீங்கள் ஒரு மெசேஜை அந்த குரூப்பிற்கு அனுப்பினால் அந்த மெசேஜ், உங்களை பிளாக் செய்தவருக்கு சென்றடையும். இதுவும் பலிக்கவில்லை என்றால் இதோ இன்னொரு முறையும் உள்ளது.

 1. வாட்ஸ் அப் செட்டிங் சென்று அதில் அக்கவுண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்.
 2. அதில் உள்ள மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை டெலிட் செய்யுங்கள்.
 3. பின்னர் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்யுங்கள்.
 4. உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
 5. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.
 6. அதில் வரும் குறிப்புகளின்படி ஓடிபி உள்பட அனைத்தியும் செய்யுங்கள், ஆனால் எந்த் பேக்கப்புகளையும் ரீஸ்டோர் செய்திட வேண்டாம்.
 7. இப்போது உங்கள் எண் எந்த ஒரு எண்ணாலும் பிளாக் செய்யப்பட்டிருக்காது. இப்போது நீங்கள் உங்கள் காண்டாக்டில் இருக்கும் அனைவருடனும் தொடர்பு கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow