ஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி?
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரெளசர் உலகின் முன்னணி பிரெளசர்களில் ஒன்றாக இருப்பதும் இதில் உள்ள வசதிகளில் முக்கிய அம்சமாக பாஸ்வேர்டுகளை பாதுகாத்து கொள்ளும் அம்சங்களில் ஒன்று என்பதும் தெரிந்ததே!. ஒவ்வொரு முறையும் ஒரு இணையதளத்திற்கு செல்லும்போது பாஸ்வேர்டுகளை பதிவு செய்வதை தவிர்க்க இந்த சிறந்த வசதியை குரோம் நமக்கு வழங்கியுள்ளது. குரோம் பிரெளசரில் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பது ஒரு எளிய முறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரெளசரின் 62வது வெர்ஷனில் இந்த பாஸ்வேர்டு பாதுகாக்கும் வசதியில் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போது பாஸ்வேர்டு குறித்த நோட்டிபிகேஷனை அளிக்கும் வகையில் புதிய அப்டேட் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனத்தில் நாம் பதிவு செய்யும் பாஸ்வேர்டுகள் அனைத்தும் மிக எளிதில் பாதுகாத்து வைக்கின்றது. ஒருமுறை பாஸ்வேர்டை பாதுகாத்து வைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்டு அதனை ஏற்றுக்கொண்டு நமது லாகினுக்கு உதவுகிறது.
பாஸ்வேர்டை குரோம் ஆண்ட்ராய்டில் எப்படி பாதுகாத்து வைப்பது என்பதை தற்போது பார்ப்போம்.
முதலில் குரோம் பிரெளசரை நீங்கள் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்துவிட்டீர்களா? என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
- முதலில் செட்டிங்ஸ் செல்லவேண்டும்.
- அதில் உள்ள பாஸ்வேர்டு என்ற ஆப்சனை டேப் செய்ய வேண்டும்.
- அனைத்து பாஸ்வேர்டுகளும் அதில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். மேலும் எந்தெந்த இணையதளத்திற்கு என்ன பாஸ்வேர்டு என்பதும் அதில் தெளிவாக காட்டும்.
- அல்ஃபபெட்டிக்கள் வரிசையின் இணையதளங்களின் பெயர்களும், அதற்குரிய பாஸ்வேர்டுகளும் தெளிவாக இருக்கும்
- பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டூகளில் ஒரு கண் படம் இருக்கும். அந்த கண் ஐகானை க்ளிக் செய்தால் நீங்கள் பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பிங்கர் பிரிண்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கேட்கும். இதற்கு அந்த போனின் உரிமையாளர் தான் பயன்படுத்துகிறார் என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்த ஏற்பாடு.
- அதன்பின்னர் பாஸ்வேர்டு, அதற்குரிய இணையதளங்கள் அதில் தோன்றும். மேலும் வேறு பிரெளசரில் லாகின் செய்தாலோ அல்லது வேறு சாதனங்களில் லாகின் செய்தாலோ இந்த பாஸ்வேர்டுகளை நீங்கள் மேனுவலாக பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அதில் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாக்கப்பட்டிருக்காது. நீங்கள் விரும்பாவிட்டால் குரோமில் இருந்து பாஸ்வேர்டு பாதுகாக்கப்பட்டதை அழித்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?