WiFi Password மறந்துவிட்டீர்களா? இதனை பின்பற்றுங்கள்!

திடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.

WiFi Password மறந்துவிட்டீர்களா? இதனை பின்பற்றுங்கள்!

உங்கள் கணினியிலோ, லேப்டாப்பிலோ WiFi இணைப்பு இருந்தால் அதன் கடவுச் சொல்லை நிரந்தரமாக சேமித்து வைத்துவிடுவார்கள். ஒருவேலை திடீரென அந்த சேமிப்பு அழிந்து விட்டாலோ, லாக் அவுட் செய்துவிட்டாலோ அதைக் கண்டறிய பெரும் சிரமமாக இருக்கும். இனி அந்தக் கவலை இல்லை. இந்த ஸ்டெப்பை பின்பற்றி கடவுச் சொல்லை கண்டறியலாம்.

ஏற்கனவே உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் கடவுச் சொல் பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்த ஸ்டெப்பை பின்பற்றலாம்.

முதலில் உங்கள் கீபோர்டில் windows key + R பட்டனை ஒரே நேரத்தில் அழுத்தவும். RUN Command prompt தோன்றும்.

அதில் ncpa.cpl என டைப் செய்து ok பட்டனை அழுத்தவும்.

ncpa.cpl

அதில் wifi எனத் தோன்றும். அதில் right கிளிக் செய்தால் status என வரும். அதைக் க்ளிக் செய்யவும்.
 

Wifi

Wifi Status திறக்கப்பட்டதும், அதற்குக் கீழ் உள்ள wireless properties என்ற பட்டனை அழுத்தவும்.
Wifi

அதில் security செக்‌ஷனில் கடவுச் சொல் இருக்கும். அதில் show characters என்பதை அழுத்தினால் கடவுச் சொல்லின் எழுத்துக்கள் தோன்றும். அதை எழுதி பாதுகாப்பாகக் குறித்துக்கொள்ளுங்கள்.
Wifi

Wifi

மற்றொரு குறிப்பு:

உங்கள் Wifi router - ன் பின் பக்கம் அல்லது அடிப்பகுதியில் கான்ஃபிகரேஷன் குறிப்பில் கடவுச் சொல் குறிப்பிடப்பட்டிருக்கும். அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow