பேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு?
இன்று பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும் அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில் சிலர் எப்போதும் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பேருக்கென்று ஒரு கணக்கினை வைத்திருப்பர் .

இன்று பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும் அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில் சிலர் எப்போதும் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பேருக்கென்று ஒரு கணக்கினை வைத்திருப்பர் .
அதனை எப்போதாவது ஓரிரு முறையாவது உபயோகப்படுத்துபவரும் உள்ளனர். ஏதோ ஒரு வகையில் அனைவரும் பேஸ்புக்கை அணுகிக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில் பேஸ்புக் கணக்கில் அடிக்கடி சேர்ச் பட்டனில் நாம் பலரை தேடி அவர்கள் சம்மந்தப்பட்ட விவரங்களை பார்த்திருப்போம் . அவையனைத்தும் அடுத்த முறை தேடும்போதும் சேர்ச் பாக்சில் வந்து நிற்கும்.
சேர்ச் பாக்சில் நாம் தேடியவர்கள் பெரும்பாலும் நாம் விரும்பாத அல்லது நம்மை விரும்பாத மேலும் நமக்கு கசப்பான அனுபவத்தை தரும் நபர்களாக இருக்க கூடும். பேஸ்புக்கில் ஆட்டோ ஸ்டோரேஜ் அம்சம் இருப்பதனால் இதுபோன்ற தேடல்களை தானாகவே சேமித்து வைத்து கொள்கின்றன. இதனை தடுக்க இதோ நான்கு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- உங்கள் பேஸ்புக் கணக்கில் cover photo வின் அருகே காணப்படும் ‘Activity Log’ அல்லது ‘View Activity Log’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- அப்பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே போஸ்ட் செய்த புகைப்படங்கள்,
- கமெண்ட்டுகள்,போன்றவற்றுடன் திரையில் தோன்றும் “more ” ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் காணப்படும் ஆப்ஷன்களில் கீழ் காணப்படும் “Search ” பட்டனை கிளிக் செய்யவும்.
- அங்கே நீங்கள் தேடிய அனைத்து பெயர்களும் மாதம் மற்றும் தேதியுடன் இருப்பதைக் காணலாம்.
- பின்னர் திரையில் வலது ஓர மூலையில் தெரியும் “clear search” ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இதற்கு முந்தைய அனைத்து தேடல்களையும் நீக்கலாம்.
What's Your Reaction?






