க்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி?
பல்வேறு வலைதளங்கள் புஷ் நோட்டிஃபிகேஷன் எனும் சேவையை கொண்டு உங்களது ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டருக்கு தகவல்களை அனுப்பும். பயனர் குறிப்பிட்ட வலைதளங்களில் சந்தாதாரர் ஆகும் பட்சத்தில் வலைதளத்தில் அப்டேட் ஆகும் முக்கிய அம்சங்கள் உடனடியாக அனுப்பப்படும்.
பல்வேறு வலைதளங்கள் புஷ் நோட்டிஃபிகேஷன் எனும் சேவையை கொண்டு உங்களது ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டருக்கு தகவல்களை அனுப்பும். பயனர் குறிப்பிட்ட வலைதளங்களில் சந்தாதாரர் ஆகும் பட்சத்தில் வலைதளத்தில் அப்டேட் ஆகும் முக்கிய அம்சங்கள் உடனடியாக அனுப்பப்படும்.
ஒருவேளை நீங்கள் தவறுதலாக நோட்டிஃபிகேஷன்களுக்கு சந்தாதாரர் ஆகிவிட்டால், அவற்றை எவ்வாறு திரும்ப பெற வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
டெஸ்க்டாப் க்ரோமில் எவ்வாறு செய்ய வேண்டும்?
- கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் கூகுள் க்ரோம் திறக்க வேண்டும்
- வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்
- செட்டிங்ஸ் ‘Settings’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
- இனி கீழ்புறமாக ஸ்கிரால் செய்து அட்வான்ஸ் ‘Advance’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- அடுத்து கன்டென்ட் செட்டிங்ஸ் ‘Content settings’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- இனி, மைக்ரோபோன் ‘Microphone’ ஆப்ஷனின் கீழ், நோட்டிஃபிகேஷன்ஸ் ‘Notifications’ செட்டிங் ஆப்ஷன் இருக்கும்
- நோட்டிஃபிகேஷன் செட்டிங் பக்கத்தின் கீழே அலோ ‘Allow’ செக்ஷன் தெரியும் வரை ஸ்கிரால் செய்ய வேண்டும்
- நீங்கள் நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்ய வேண்டிய வலைதளத்தின் வலதுபுறமாக காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்
- இனி பிளாக் ‘Block’ ஆப்ஷனை க்ளிக் செய்து குறிப்பிட்ட வலைதளத்தின் நோட்டிஃபிகேஷனகளை பிளாக் செய்யலாம்
- எனினும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் பிளாக் செய்ய, மேல்புறமாக ஸ்கிரால் செய்து அனைத்து நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் எவ்வாறு செய்ய வேண்டும்?
- ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் இல் க்ரோம் ஆப் லான்ச் செய்ய வேண்டும்
- வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் ‘Settings’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
- இனி சைட் செட்டிங்ஸ் ‘Site settings’ ஆப்ஷனை தேர்வு செய்து நோட்டிஃபிகேஷன்ஸ் ‘Notifications’ க்ளிக் செய்ய வேண்டும்
- கீழ் புறம் ஸ்கிரால் செய்து குறிப்பிட்ட வலைதளத்தை தேர்வு செய்து ஆஃப் செய்யலாம்
- அனைத்து நோட்டிஃபிகேஷன்களையு்ம ஆஃப் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது
ஐஓஎஸ் சாதனங்களில் (ஐபோன் மற்றும் ஐபேட்) க்ரோம் நோட்டிஃபிகேஷன்ஸ் அம்சத்தை வழங்கவில்லை.
What's Your Reaction?