கூகிள் டியோவில் இப்போது 32 பேர் வரை வீடியோ அரட்டை செய்யலாம்!

டியோவில் நீங்கள் வீடியோ அரட்டையடிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை கூகிள் மீண்டும் உயர்த்தியுள்ளது.

கூகிள் டியோவில் இப்போது 32 பேர் வரை வீடியோ அரட்டை செய்யலாம்!

டியோவில் நீங்கள் வீடியோ அரட்டையடிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை கூகிள் மீண்டும் உயர்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் எட்டிலிருந்து 12 ஆக கூகுள் உயர்த்தியது மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு டெஸ்க்டாப்புகளுக்கான கூகிள் குரோம் இல், பயனர்கள் இப்போது ஒரே டியோ குழு அழைப்பில் 32 பேரைக் கொண்டிருக்கலாம்.

32 நபர்கள் கொண்ட டியோ அழைப்புகள் கூகிளின் சொந்த உலாவிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் அவை வெப்ஆர்டிசி எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றன, இது Chrome இன் சமீபத்திய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கிறது. ஃபயர்பாக்ஸ் போன்ற பிற உலாவிகளுக்கு இதை வெளியிட திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து கூகிள் கருத்து தெரிவிக்கவில்லை.

கூகிளின் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பின் மூத்த இயக்குனர் சனாஸ் அஹாரி, புதிய குழு அழைப்பு வரம்பு டியோவின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகளுக்கு “அடுத்த இரண்டு வாரங்களில்” வரும் என்றார். புதிய புதுப்பிப்பு கூகிள் டியோவை 32 நபர்கள் குழுவின் பங்குபற்ற அனுமதிக்கும் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow