இரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு!

இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற பிரபல தேடுபொறியான கூகுளின் வருடாந்திர மேம்பாட்டாளர் கருத்தரங்கம் ஐஓ 2018ல், தனது கூகுள் மேம்ஸ் செயலியில் ஆக்குமென்டேட் ரியாலிட்டி திறன்களை செயல்படுத்தி காட்டியது. தற்போது ஆப்பிள் நிறுவனமும் அதே பாதையை பின்பற்றி பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள சில வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம், அதன் மேப்ஸ்-ல் ஆக்குமெண்டேட் ரியாலிட்டியை கொண்டுவருவதை மறைமுகமாக அறிய முடிகிறது.

இந்த வேவைவாய்ப்பு அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் ‘ஏஆர் அப்ளிகேசன் இன்ஜினியர்’ என வேலைவாய்ப்பு அறிவிப்பை காணமுடிகிறது. அதனைத்தொடர்ந்து ‘ஏஆர் அப்ளிகேசன்’ என்ற தலைப்பில் மேலும் 5 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஒன்று இந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்குமெண்டேட் ரியாலிட்டி பிரிவுக்கு ஆப்பிள் முக்கியத்துவம் தருவது தெளிவாக தெரிந்தாலும், இதில் ஏஆர் தொழில்நுட்ப செயல்படுத்தப்படும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த செயலிகளில் ஒன்றாக ஆப்பிள் மேப்ஸ் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் மேப்ஸ் டீமிற்கு ப்ராடெக்ட் ஆர்கிடெக்ட் காலிப்பணியிடம் இருப்பதாகவும், அந்த பணியிடத்திற்கான பொறுப்புகளையும் விளக்கியிருந்தது.

நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய அம்சமாகவும், தவிர்க்க முடியாத அங்கமாகவும் டிஜிட்டல் மேப்ஸ் மாறிவிட்டாலும்,இன்னமும் அவை குழந்தை பருவத்திலேயே தான் உள்ளன. நகர இயக்கத்திலிருந்து உட்புற இடங்கள் வரை, லிடார்(LIDAR)லிருந்து ஆக்குமெண்டேட் ரியாலிட்டி வரை, தொழில்நுட்ப ரீதியான மற்றும் புது வித தரவுகள் என பல மேம்பாடுகள்,டிஜிட்டல் மேப்ஸ்ன் அனைத்து பகுதிகளிலும் புதுமையை புகுத்துகிறது. நீங்கள் மேப்ஸ்களை விரும்பினால் மற்றும் என்ன சாத்தியமோ அதில் ஆர்வமாக இருந்தால், இந்த பதவிக்கு தகுதியானவர் என்கிறது அந்த விளக்கவுரை.

“ஐ ஓஎஸ்/மேக் ஓஎஸ் இன்ஜினியர்” என்ற மற்றொரு பணியிடமும் கடந்த ஜூன் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆப்பிள் மேப்ஸ் பற்றி குறிப்பிட்டு கூறவில்லை எனினும், ‘மேப்ஸ் மற்றும் கோர் லோகேசன் ஏபிஐகளில் பரிச்சயம்’, ‘ஆக்குமெண்டேட் ரியாலிட்டி ஏபிஐகளில் பரிச்சயம்’ போன்றவை கூடுதல் தகுதிகள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்குமெண்டேட் ரியாலிட்டி அம்சங்கள் ஐஓஎஸ் 12 ன் ஒரு பகுதியாக வெளிவரப்போகிறதா அல்லது எப்போது வெளியாகப் போகிறது என தெளிவாக, உறுதியாக தெரியாத நிலையிலும், இது ஐஓ2018 கருத்தரங்கில் கூகுள் நிறுவனம் காட்டிய கூகுள் மேப்ஸ் அம்சத்தை போன்று இருக்கும் என உறுதியாக நம்பலாம். நீங்கள் எளிதாக மேப்ஸ் செயலியை திறந்து, உணவகத்தை கேமரா வாயிலாக பார்த்தாலே, அதன் உணவு பட்டியல், செயல்படும் நேரம் அனைத்தையும் திரையில் பார்க்கமுடியும். நேவிகேசனிலும் சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow