ஐபோன் காண்டாக்ட்ஸ் விபரங்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றம் செய்வது எப்படி?
ஐபோன் பயன்பாட்டில் இருந்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கு மாறும் அணைத்து பயனர்களும் சந்திக்கும் ஒரு மிகப் பெரிய சிக்கல், ஐபோன் இல் உள்ள காண்டாக்ட்ஸ் விபரங்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றம் செய்வது தான்.

ஐபோன் பயன்பாட்டில் இருந்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கு மாறும் அணைத்து பயனர்களும் சந்திக்கும் ஒரு மிகப் பெரிய சிக்கல், ஐபோன் இல் உள்ள காண்டாக்ட்ஸ் விபரங்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றம் செய்வது தான்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி எளிதாய் உங்கள் ஐபோன் காண்டாக்ட் விபரங்களை ஆண்ட்ராய்டு மொபைல் இல் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இரண்டு எளிய முறை
ஐபோன் காண்டாக்ட்ஸ் விபரங்களை இரண்டு எளிய முறைப்படி ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாற்றம் செய்துகொள்ளலாம். இதனை செய்வதர்க்கு முதலில் உங்களின் ஐபோன் காண்டாக்ட் விபரங்களை ஐகிளவுட் சேவைக்கு எக்ஸ்போர்ட் செய்து, பின் அங்கிருந்து உங்களின் ஆண்ட்ராய்டு போனிற்கு கூகுள் காண்டாக்ட்ஸ் மூலம் இம்போர்ட் செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
ஐபோன் காண்டாக்ட் – ஆண்ட்ராய்டு காண்டாக்ட் மாற்றம் செய்யும் செயல்முறை:
– உங்களுடைய லேப்டாப் அல்லது மேக் டிவைஸ் இல் சஃபாரி பிரௌசர் அல்லது மோசில்லா ஃபையர் ஃபாக்ஸ் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
– முக்கிய குறிப்பு இந்த செயல்முறை கூகுள் கிறோம் பிரௌசரில் செயல்படாது.
– iCloud.com லிங்கிற்கு சென்று உங்களின் ஆப்பிள் ஐ.டி-யை லாகின் செய்துகொள்ளுங்கள்.
காண்டாக்ட்ஸ்
– “காண்டாக்ட்ஸ்” கிளிக் செய்யுங்கள்.
– இடது மேல் மூலையில் உள்ள “ஆல் காண்டாக்ட்ஸ்(All Contacts)” கிளிக் செய்யுங்கள்.
– விண்டோஸ் கம்ப்யூட்டரில் செயல்முறையை பின்பற்றினால் ctrl மற்றும் A சேர்த்து ப்ரெஸ் செய்யவும்.
– ஒருவேளை மேக்பூக்கில் செயல்முறையை பின்பற்றினால் Command மற்றும் A சேர்த்து ப்ரெஸ் செய்யவும்.
எக்ஸ்போர்ட் விகார்டு
– இடது கீழ் மூலையில் உள்ள “செட்டிங்ஸ்” கிளிக் செய்யவும்.
– “எக்ஸ்போர்ட் விகார்டு(Export vCard)” கிளிக் செய்யுங்கள். இது உங்களின் காண்டாக்ட் விபரங்களை .vcf ஃபைல் என்ற பெயரில் டவுன்லோடில் சேவ் செய்துவிடும்.
– அணைத்து காண்டாக்ட்களையும் கிளிக் செய்து இறுதியாக எக்ஸ்போர்ட் கிளிக் செய்யுங்கள்.
இந்த செயல்முறைகளை பின்பற்றி உங்களின் காண்டாக்ட் விபரங்களை ஐகிளவுட் சேவையில் எளிதாக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம்.
ஐகிளவுட் காண்டாக்ட் – கூகுள் காண்டாக்ட் இம்போர்ட் செய்யும் செயல்முறை:
ஐகிளவுட் இல் எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட காண்டாக்ட் விபரங்களை தற்பொழுது எப்படி இம்போர்ட் செய்யலாம் என்ற செயல்முறையை பார்க்கலாம்.
கூகுள் காண்டாக்ட்ஸ் இம்போர்ட்
– உங்கள் கம்ப்யூட்டரில் வெப் பிரௌசர் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
– உங்களின் கூகுள் அக்கௌன்ட் லாகின் செய்துகொள்ளுங்கள்.
– “கூகுள் ஆப்ஸ்” பட்டன் கிளிக் செய்யுங்கள்.
– “காண்டாக்ட்ஸ்” கிளிக் செய்துகொள்ளுங்கள்.
– இப்பொழுது “இம்போர்ட் காண்டாக்ட்ஸ்” கிளிக் செய்யுங்கள்.
இம்போர்ட் விகார்டு
– “சூஸ் ஃபைல்(Choose File)” ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– சேவ் செய்யப்பட்ட விகார்டு ஃபைலை, அதன் போல்டரில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
– இப்பொழுது “இம்போர்ட்” ஆப்ஷனைகிளிக் செய்யுங்கள்.
– உங்களின் அணைத்து காண்டாக்ட்ஸ் விபரங்களும் வருவதற்கு சிறுது நேரம் எடுத்துக்கொள்ளும், பொறுமை காக்கவும்.
– இப்பொழுது “ஃபைண்ட்(Find)” கிளிக் செய்யுங்கள்.
– ரெட் மெசேஜ் பாக்ஸ் பாப் அப் ஆகும், அதில் உள்ள “மெர்ஜ்” ஆப்ஷன் கிளிக் செய்யவும்.
ஐபோன் – ஆண்ட்ராய்டு காண்டாக்ட் மாற்றம்
இப்பொழுது உங்களின் காண்டாக்ட்ஸ் விபரங்கள் அனைத்தும், உங்களின் கூகுள் காண்டாக்ட்ஸ் உடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும். உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அக்கௌன்ட் லாகின் செய்து, ஐபோன் காண்டாக்ட்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
What's Your Reaction?






