அனைத்து விண்டோஸ் 10 பயனர்களுக்கும் புதிய உலாவி!
"எட்ஜ்" முற்றிலும் மாறுகின்றது மற்றும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தங்களின் சொந்த "எட்ஜ்ஹெச்எம்எல்" இயந்திரத்தை நிறுத்துவதாகவும், மாறாக போட்டியாளரான கூகிளிடமிருந்து குரோமியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எட்ஜ் செயல்படுத்த போவாதாக அறிவித்தனர்.
மைக்ரோசாப்ட் அதன் குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியின் முதல் பதிப்பை ஜனவரி மாதத்திலேயே தயாராக வைத்திருந்தது, பல மாத சோதனைக்குப் பிறகு, விண்டோஸ் 10 உள்ள அனைவருக்கும் இதை வெளியிட தயாராக உள்ளது.
நீங்கள் அதை தானாகவே பெறுவீர்கள்
விண்டோஸ் புதுப்பிப்பு மூலம் எட்ஜ் வரும் வாரங்களில் தானாகவே வெளியீடு செய்யப்படும், இதன் ஊடாக தான் பாதுகாப்பு மற்றும் அம்ச புதுப்பிப்புகளையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
எட்ஜின் புதிய குரோமியம் பதிப்பு நிறுவப்பட்டதும், அது இன்றைய எட்ஜ் உலாவியை மாற்றும்.
எட்ஜின் பழைய அல்லது புதிய பதிப்பை அதன் ஐகானைப் பார்த்து உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.
Chrome நீட்டிப்புகள் மற்றும் புதிய அம்சங்களைப் பெறுங்கள்
பழைய எட்ஜ் போல தோற்றமளிக்கும் அதே வேளையில், மற்ற விண்டோஸ் 10 புரோகிராம்களுக்கு ஏற்ப புதிய பதிப்பு இலகுவாகவும் நவீனமாகவும் தோற்றமளிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உலாவியின் முக்கிய நன்மை என்னவென்றால், நீங்கள் இப்போது கூகிள் குரோம் உலாவிக்காக எழுதப்பட்ட அனைத்து நீட்டிப்புகளையும் நேரடியாக எட்ஜில் பயன்படுத்தலாம்.
What's Your Reaction?