கூகிள் உளவு பார்த்ததா?
கூகிள் "மறைநிலை" தனியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை.

ஒரு புதிய வெகுஜன வழக்குப்படி, கூகிள் மறைநிலை பயன்முறையைப் பயன்படுத்தி குரோம் பாவிப்பவர்களை உளவு பார்க்கிறது, இது உலாவி மூடப்படும்போது எல்லா தடங்களையும் அழிக்க வேண்டும். ஆனால் அதனை அது செய்யவில்லை என அந்த வழக்கில் குறிப்பிடப்படுகின்றது.
கூகிள் "தனியார்" உலாவலில் பல ஆண்டுகளாக உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
குற்றச்சாட்டின் படி கூகுள் மக்கள் உலாவியில் என்னத்தை பாவிக்கின்றார்கள் என உளவு பார்த்துள்ளார்கள். தனியார் முறையில் இதனை அவர்கள் அழிக்கவேண்டும் அதனை அவர்கள் செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குப்படி, கூகிள் நிறுவனம் கூகுள் அனலிட்டிக்ஸ், கூகிள் விளம்பர மேலாளர் மற்றும் பல உலாவி நீட்டிப்புகள் மற்றும் சேவைகளிலிருந்து கூகிள் தகவல்களை சேகரிக்கிறது. மொபைல் பயன்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
பயனர்களின் ஷாப்பிங் பழக்கம் மற்றும் "மிகவும் நெருக்கமான மற்றும் சங்கடமான விஷயங்கள்" பற்றிய தகவல்களை எடுத்துள்ளார்கள்.
இது சட்டபூர்வமாகவும் சரியான அடிப்படையில் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தால் ஒரு நபருக்கு $ 5000 டாலர்களை நஷ்ட ஈடாக கூகுள் நிறுவனம் வழங்கவேண்டும்.
What's Your Reaction?






