மூன்று மாதங்களுக்கும் மேலான இடுகைகளை பகிர்ந்தால் பேஸ்புக் இப்போது எச்சரிக்கை செய்யும்!
மூன்று மாதங்களுக்கும் மேலான ஒரு செய்தியைப் பகிர முயற்சித்தால் பேஸ்புக் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையைக் காண்பிக்கும்.
மூன்று மாதங்களுக்கும் மேலான ஒரு செய்தியைப் பகிர முயற்சித்தால் பேஸ்புக் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையைக் காண்பிக்கும். இந்த எச்சரிக்கை பயனர்களுக்கு நல்ல தகவல்களை வழங்குவதற்கும், காலாவதியான தகவல்களைக் கொண்டிருக்கும் இடுகைகளின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு இது ஒரு முயற்சியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிழையான தகவல்களை பேஸ்புக் நிறுவனம் தங்கள் செய்தி ஸ்ட்ரீமில் தடுக்க விரும்புகிறது. தகவல்கள் முதலில் எழுதப்பட்டதை விட முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக மீண்டும் பாவிக்கப்படுகின்றதால் இப்படியான எச்சரிக்கை மூலம் பாவனையாளர்களுக்கு நினைவூட்டுகின்றது.
What's Your Reaction?