மொபைல் போன் கான்டாக்ட்களை மெசன்ஜர் செயலியுடன் சின்க் செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அனைத்து சேவைகளையும் இன்ஸ்டாகிராம் செயலியுடன் ஒன்றிணைக்க மெசன்ஜர் செயலியில் புதிய அம்சத்தை ஃபேஸ்புக் சேர்த்திருக்கிறது.

புதிய அம்சம் கொண்டு உங்களது இன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக் மெசன்ஜருடன் சின்க் செய்ய முடியும். இந்த அம்சம் உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் செய்ய வேண்டியவை:

 • இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ ஃபேஸ்புக் மெசன்ஜருடன் இணைக்கும் போது, உங்களின் காண்டாக்ட்கள் தானாக மெசன்ஜரில் சேர்க்கப்பட்டு விடும்.
 • உங்களது இன்ஸ்டாகிராம் யூசர்நேம் மற்றும் அக்கவுன்ட் மெசன்ஜரில் உள்ளவர்களுக்கும் தெரியும்.
 • ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யவும்.
 • இரண்டு செயலிகளிலும் லாக்-இன் செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் மெசன்ஜரில் கான்டாக்ட்களை சின்க் செய்யும் வழிமுறைகள்:

 1. முதலில் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை ஓபன் செய்ய வேண்டும்.
 2. இனி ப்ரோஃபைல் (Profile) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது செயலியின் வலதுபுறம் மேல் பக்கமாக காணப்படும்.
 3. கீழ் பக்கமாக ஸ்கிரால் செய்து பீப்புள் (People) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
 4. இரண்டவாது ஆப்ஷனான சின்க் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் (Sync Instagram Account) தேர்வு செய்ய வேண்டும்.
 5. இன்ஸ்டாகிராம் செயலியை ஏற்கனவே இன்ஸ்டால் மற்றும் கான்ஃபிகர் செய்திருந்தால் கனெக்ட் டு (Connect to) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
 6. இனி ஆப் கான்டாக்ட்களை சின்க் செய்ய துவங்கும்.

சின்க் கான்டாக்ட்ஸ்

இந்த வழிமுறை நிறைவுற்றதும், உங்களது இன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் பார்க்க முடியும். போன் கான்டாக்ட்களையும் ஃபேஸ்புக் மெசன்ஜருடன் சின்க் செய்ய, சின்க் கான்டாக்ட்ஸ் (Sync Contacts) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ மெசன்ஜரில் இருந்து டிஸ்-கனெக்ட் செய்யும் வழிமுறைகள்:

 1. முதலில் ப்ரோஃபைல் ஐகானை க்ளிக் செய்து பீப்புள் (People) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
 2. இனி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் (Instagram Account) மற்றும் டிஸ்கனெக்ட் (Disconnect) ஆப்ஷன்களை க்ளிக் செயய் வேண்டும்.