இணைய தேவைகளுக்கு நம் அனுபவத்தை சீராக வழங்கும் சிரமமான பணியினை பிரவுசர்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் எல்லா பிரவுசர்களும் எப்போதும் சீராக இயங்குவது சாத்தியமற்றது என்றே கூற வேண்டும்.

இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அவசரமாக பிரவுசர்களை மாற்றும் போது, நீங்கள் சேமித்து வைத்திருந்த பாஸ்வேர்டு மற்றும் லாக்-இன் தகவல்களை இழக்காமல், அவற்றை பேக்கப் செய்ய வேண்டுமா? இதற்கு கூகுளிடம் பதில் உள்ளது.

சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்யும் வசதியினை கூகுள் ஒருவழியாக சேர்த்துவிட்டது. இனி பயணர்கள் தங்களது பிரவுசர் பாஸ்வேர்டு, லாக் இன் விவரங்களை கான்டாக்ட் பேக்கப் ஃபைல் வடிவில் சேமித்து கொள்ள முடியும்.

இந்த அம்சம் கூகுளின் சமீபத்திய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இனி தங்களது அனைத்து பாஸ்வேர்டகளையும் CSV ஃபைல் வடிவில் எக்ஸ்போர்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் ஒரு பிரவுசரில் இருந்து மற்றொரு பிரவுசருக்கு மாறும் போது பயனுள்ளதாக இருக்கும்.

சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எவ்வாறு எக்ஸ்போர்ட் செய்து என தெரியவில்லையா? இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே பார்ப்போம்:

முதலில் செய்ய வேண்டியவை:

பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

 • நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யும் CSV ஃபைலினை எவர் வேண்டுமானாலும் இயக்க முடியும் என்பதால் அதனை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 • பயனர்கள் தங்களது CSV ஃபைலினை மைக்ரோசாஃப்ட் எக்செல் அல்லது கூகுள் ஸ்ப்ரெட்ஷீட் போன்ற மென்பொருள்களின் மூலம் இயக்க முடியும்.
 • பல்வேறு பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருள்களை கொண்டு லாக்-இன் தகவல்களை இம்போர்ட் செய்ய முடியும்.
 • இந்த வசதியை பயன்படுத்த அப்டேட் செய்யப்பட்ட கூகுள் க்ரோம் பயன்படுத்த வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

 1. கூகுள் க்ரோம் மென்பொருளை கம்ப்யூட்டரில் ஓபன் செய்ய வேண்டும்.
 2. வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.
 3. செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செயய் வேண்டும்.
 4. கீழ் புறமாக ஸ்வைப் செய்து அட்வான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
 5. மேனேஜ் பாஸ்வேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்து ஃபார்ம்ஸ் செக்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
 6. மேனேஜ் பாஸ்வேர்டு செக்ஷனில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.
 7. இனி எக்ஸ்போர்ட் பாஸ்வேர்டு (Export passwords) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
 8. மீண்டும் எக்ஸ்போர்ட் பாஸ்வேர்டு ஆப்ஷனை பாப்-அப் இல் க்ளிக் செய்ய வேண்டும்.
 9. இங்கு உங்களது லாக்-இன் விவரங்களை கொண்டு வெரிஃபை செய்ய வேண்டும்.
 10. இறுதியில் எக்ஸ்போர்ட் ஆகும் ஃபைல் சேமிக்கப்பட வேண்டிய லொகேஷனை தேர்வு செய்து சேவ் (save) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வீடியோக்காட்சியினை பாருங்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here