வாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.!

0
வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

வாட்ஸ்அப் நிறுவனம்,இந்த ஆண்டின் துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் பீட்டா 2.18.234 ஆன்ட்ராய்ட் வெர்ஷனை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கிவுள்ளதாக செய்திகள் வந்தது.

உங்கள் வாட்ஸ்அப் ற்கு எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பினால் அந்த வீடியோவை வாட்ஸ்அப் இல் இருந்தபடியே இனி உங்களால் பறக்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இதர சமூக வலைத்தளங்களில் இயங்கும்படி அப்டேட் செய்துள்ளது.

இந்த பிக்சர் இன் பிக்சர் மோட் வசதியுடன் வீடியோக்களை வாட்ஸ்அப் இல் இருந்த படியே பார்த்துக்கொள்ள இந்த புதிய அப்டேட் அனுமதி வழங்குகிறது. யூடியூப் வீடியோவின் திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை இனிமேல் பார்க்க முடியும்.

இத்துடன் பிக்சர் இன் பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம் வீடியோஸ்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த சேவை நடைமுறை படுத்தப்படவில்லை. இனி வரவிருக்கும் அப்டேட்களில் இந்த சேவைகளை பயனர்கள் பெறுவார்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.