தமிழில் மொழிபெயர்க்கும் உதவும் தரமான 4 ஆப்ஸ்கள்.!

0
Google Translate
Google Translate

உலகில் 7,000 க்கும் அதிகமான மொழிகள் உள்ளன, அவற்றில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வரலாறுகளுடன் ஒலிகளுடன் உள்ளது. இவை அனைத்தும் கொண்டாடப்பட வேண்டியவை . ஆனால், சில மொழிகள் மட்டுமே பொதுவாகவும் பரவலாகவும் பேசப்படுகின்றது. அவற்றில் ஆங்கிலத்தின் தாக்கம் நம் அனைவரையும் இணைத்து வைத்துள்ளது என்பதே உண்மை.

வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கு வேலை சார்ந்தோ அல்லது பயணிக்கும் பொழுது நம்மில் பலருக்கும் இந்த மொழி சிக்கல் நேர்ந்திருக்கும். அப்பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மொழியாக்க ஆப்ஸ்கள் கூகுள் பிலேஸ்டோரை நிரப்பிக்கொண்டுள்ளது. அதில் தமிழ் மொழியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் சில சிறந்த ஆப்ஸ்கள் உங்களுக்காக.

கூகுள் டிரான்ஸ்லட் (Google Translate)

கூகுள் நிறுவனத்தின் அல்டிமேட் ஆப்ஸ் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த கூகுள் டிரான்ஸ்லட் ஆப். இணைய வசதியில் 103 மொழிகளுக்கு இந்த ஆப் மொழியாக்கம் செய்வதுடன் ஆஃப்லைனில் 59 மொழிகளை மொழிபெயர்க்கவும் முடிகிறது. உங்கள் கேமரா மூலம் மொழிபெயர்க்கும் வசதி 37 மொழிகளில் உள்ளது. ஆடியோ மொழிபெயர்ப்பு வசதியும் இதில் உள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமே இதில் விளம்பரங்கள் கிடையாது முற்றிலும் இலவசம்.

தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் (Tamil-English Translator)

இந்த இலவச மொழிபெயர்ப்பாளர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் வார்த்தைகள் மற்றும் முழுமையான வாக்கியங்களை விரைவாக மொழிபெயர்க்க முடியும். உடனடி மொழிபெயர்ப்பு பயன்பாடு பயணிகளுக்கு, மாணவர்களுக்கு மற்ற அணைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் குரல் உள்ளீடு முறையும் உள்ளது.

குரல் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாளர் (Translate voice – Translator)

அற்புதமான குரல் மொழிபெயர்ப்பாளர், உலகின் எல்லா மொழிகளையும் குரல் உள்ளீடு முறையில் மொழிபெயர்க்கலாம். இந்த மொழிபெயர்ப்பாளர் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.இதில் பிரெஞ்சு,ஜேர்மன், அரபிக் போன்று 80 மொழிகளைக் குரல் உள்ளீடு முறையில் மொழிபெயர்க்கலாம்.இனி உங்கள் குரல் அணைத்து உலக மொழிகளிலும் ஒலிக்கும்.

யூ-அகராதி (U-Dictionary)

யூ அகராதி 38 சர்வதேச மொழிகளுக்கு ஆஃப்லைன் மொழியாக்கம் செய்வதுடன், வாட்ஸாப் மற்றும் வலைத்தளங்களில் உங்களுக்குப் புரியாத வார்த்தைகளைக் காப்பி செய்தல் போதும் நொடியில் மொழியாக்கம் செய்துவிடுகிறது. இதுமட்டுமில்லாமல் உங்கள் கேமரா மூலம் மொழிபெயர்க்கும் வசதியும் இதில் இருக்கிறது, உங்கள் முன்னாள் இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கேமரா வழி பார்த்தால் போதும் உடனே அதை மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்லிவிடும்.