உங்கள் கணினியை காப்புப்பிரதி செய்திட்டிங்களா?

0

… அது ஒரு பாதுகாப்பான இடத்தில் உள்ளதா?

புகைப்படங்கள், வீடியோக்கள், மாணவர்களின் படிப்பு சம்பந்தமானவை, வேலை பொருள் – என்று நாம் பலவற்றை காப்புப்பிரதி செய்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்யாது இருந்தால் உங்கள் கணினி பழுதடைந்தால் அல்லது வைரஸ் தாக்கம் எற்பட்டால் உங்கள் கணினியில் உள்ளவை அழிந்துவிடும்.

காப்புப்பிரதியினை சேமித்து கொள்ள தற்பொழுது பல இணையத்தள சேவைகள் வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

அனைத்து காப்பு தீர்வுகள் பின்வரும் அளவுகோல்களின்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

  • பாதுகாப்பு – இணையத்தளங்களில் காப்புப்பிரதியினை சேமிக்கப்படும் போது பெரும்பான்மை கோப்புகளை என்க்ரிப்ட் இல்லை என்பதால் நான், இந்த இலவச சேவைகளில் முக்கியமான கோப்புகளை சேமித்து வைக்க பரிந்துரைக்க மாட்டேன்.
  • நீண்ட காலச்சட்டகம் – நீங்கள் பாவிக்கும் நிறுவனம் பல ஆண்டுகாலம் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குமா?
  • எளிமை – பயன்படுத்த எளிதாக உள்ளதா? பல சாதனங்களில் பயன்படுத்தும்படி உள்ளதா?
  1.  SpiderOak ( https://spideroak.com/ 

இலவச பிரிவில் மட்டும் 2 ஜிபி சேமித்து வைக்க அனுமதிக்கிறது. இருப்பினும் தனது பாதுகாப்பு அடிப்படையில் முதலாவது இடத்தில் உள்ளது. உங்கள் கோப்பு கணினியில் இருந்து இணையத்தளத்திற்கு தரையேற்றம் செய்யும் பொழுது என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

கூடுதலாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோப்புறைகள் மற்றும் கோப்புகளை இலகுவாக சேமித்து வைக்கலாம்.

2007ம் ஆண்டுதொடக்கம் இச் சேவையினை வழங்கி வருகின்றது. பல விருதுகளையும் பெற்றுள்ளது.

2. Idrivehttps://www.idrive.com/index.html )

1990ம் ஆண்டு தொடக்கம் இணையசேவையில் உள்ள நிறுவனம். உங்கள் கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்க 5 ஜிபி இலவசமாக வழங்குகின்றது.

உங்கள் கோப்புகளை சேமிப்பு வங்கிக்கு அனுப்ப முதல் குறியாக்கம் மூலம் என்க்ரிப்ட் செய்யலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோப்புறைகள் மற்றும் கோப்புகளை தொடர்ச்சியான சுழச்சி மூலம் சேமித்து வைக்க முடியும்.

3 Google Drivehttp://www.google.com/drive/about.html )

கூகுள் நிறுவனத்தின் அன்லைன் சேமிப்பு சேவையில் 15 ஜிபி வழங்குகின்றது. இது தொடங்குவதற்கு மிகவும் எளிதானது.

இந்தச்சேவையினை பெற்றுக்கொள்வதற்கு கூகுள் மின்னஞ்சல் சேவையில் நீங்கள் இணையவேண்டும். (gmail.com)

கூகுளின் சேவையில் பெரிய பின்னடைவாக இருப்பது என்க்ரிப்ட்  செய்யமுடியாது.

4. DropBox ( http://www.dropbox.com )

டிராப்பாக்ஸ் இலவசமாக 2GB சேமித்து வைக்க வழங்குகிறது. இருப்பினும் என்க்ரிப்ட்  செய்யப்படாமல் உங்கள் கோப்புகள் தரையேற்றம் செய்கின்றது.

டிராப்பாக்ஸ் மிக இலகுவாக தனது சேவையினை வழங்குகின்றது. நீங்கள் எந்த ஒரு சாதனங்கள் இருந்தாலும் அதில் பயன்படுத்தும்படி உள்ளது.