சமூக வலைதளங்களின் அரசனாக திகழ்ந்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்த வீடியோ ஸ்டேட்டஸ் முறைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்த அதிருப்தியை தொடர்ந்து பழைய ஸ்டேட்டஸ் வசதியை மீண்டும் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வாட்ஸ் அப் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்காக, புதிய சேவையை அறிமுகம் செய்தது. அதில், வாட்ஸ் அப் பயன்படுத்துவோர், தங்களின் மன எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இதுநாள் வரை, எழுத்து மூலமாகப் பதிவு செய்யும் ஸ்டேட்டஸ் முறையை மாற்றி, வீடியோ, ஃபோட்டோ போன்ற சில மணித்துளிக் காட்சித் தொகுப்பு ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளும் வசதியை வழங்கியிருந்தது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய வசதிக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள வாட்ஸ் அப் மீண்டும் பழைய ஸ்டேடஸ் முறையை விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளது.