இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.?

0
Samsung Galaxy S8
Samsung Galaxy S8

சமீபத்திய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய சாம்சங் நிறுவனத்தின் முதன்மை சாதனங்களின் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்குமென்று வெளியீட்டிற்கு முன்னர் பல வதந்திகள் பரிந்துரைத்தன. இப்போது இந்த கொரிய நிறுவனம் அந்த டூயல் கேமரா யோசனயை விட்டுக்கொடுப்பதாய் என்பது போல் தெரிகிறது.

அதாவது சாம்சங் நிறுவனம் அதன் இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் புகைப்பட ஆதரமொன்று தெரிவிக்கிறது.

விபோ மூலம் வெளியாகியுள்ள இந்த லீக்ஸ் புகைப்படத்தின்படி வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கும் இந்த கருவியில் இரட்டை பின்புற கேமரா லென்ஸ்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த லீக்ஸ் படம் வரவிற்கும் சாதனத்திற்கு பின்னால் கைரேகை ஸ்கேனர் இல்லாததையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் சாம்சங் பிராண்ட் இறுதியில் அதன் டிஸ்பிளேவிற்கு கீழே கைரேகை சென்சார் ஒருங்கிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது.

முன்னதாக, டிஸ்பிளேவில் சில ப்ரைட்னஸ் இம்பேலன்ஸ், அதாவது பிரகாச சமநிலையின்மை ஏற்படுவத காரணமாக, சாம்சங் அதன் டிஸ்பிளேவிற்கு உள்ளே கைரேகை ஸ்கேனரை ஒருங்கிணைக்கும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல அறிக்கைகள் தெரிவித்தன.

எனினும், இந்த புகைப்படம் அதிகாரப்பூர்வமான படம் அல்ல மற்றும் இது மிகவும் உறுதியான அம்சம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிக்கையை சிட்டிகை உப்பில் துளி அளவு எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.