‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்!

‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்!

20
SHARE
உய்விஸ்
உய்விஸ்

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கம்யூட்டர்களை ஹேக் செய்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து தற்போது இன்னொரு ‘உய்விஸ்’ என்ற புதிய வைரசை ஹேக்கர்கள் ஊடுருவ விட்டுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

தொழில்நுட்ப உலகின் அசுரர்களாக தற்போது உருவெடுத்துள்ள ‘வன்னாக்ரை’ என்ற ஹேக்கிங் குழு, இமெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை அனுப்புகின்றனர். விபரமில்லாமல் அந்த இமெயிலை திறந்து பார்க்கும்போது, மால்வேரானது அவரது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து திருடிவிடுகின்றது.

இதனைத்தொடர்ந்து, ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை தரும்பட்சத்தில் கம்யூட்டரின் தகவல்களை ரீலீஸ் செய்கின்றனர். இல்லையேல், அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் ‘வன்னாக்ரை’ குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களின் கம்யூட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இணைய பாதுகாப்பு அமைப்புகள் இந்த வைரஸ் தாக்குதலிருந்து எப்படி தப்பிப்பது என்று வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன.

இத்தாக்குதலால், பல நிறுவனங்களின் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதா, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலிலிருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த வைரஸை போன்று ‘உய்விஸ்’ என்ற இன்னொரு புதிய வைரஸ் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களை தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் அவசர நிலை செயல்திட்ட மையம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய வைரஸ் ‘ரான்சம்வேர்’ போன்றே விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் ஊடுருவி உள்ளே நுழைகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .uiwix என்ற பார்மெட்டாக மாற்றிவிடும்.

இதுவரை ‘உய்விஸ்’ வைரசால் எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லை. ஆனாலும், எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசரநிலை செயல்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.