பேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.!

0
டிவிட்டர் லைட்
டிவிட்டர் லைட்

டிவிட்டர் நிறுவனம் அதன் டிவிட்டர் லைட் பயன்பாட்டுச் செயலியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த லைட் செயலி டேட்டா பயன்பாட்டுச் சேவையை சேமித்து எளிதாக பயன்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 45 நாடுகளுக்கும் இந்தச் சேவை வழங்கப்படும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.

எளிமையான தோற்றத்துடன் மற்றும் 2G & 3G போன்ற மெதுவான டேட்டா கனெக்ஷன் நிலையிலும் கூட இணைப்புகளில் வேகமாகச் செயல்படும் விதத்தில் இந்த லைட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வளரும் நாடுகளில் குறைந்த அலைவரிசை பயன் படுத்துபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே டிவிட்டர் நிறுவனம் அதன் செயலியின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்துள்ளது.

அசல் டிவிட்டர் பயன்பாட்டு செயலி போலவே இந்த லைட் வெர்ஷன் செயலியும் செயல்படுகிறது. அசல் செயலியில்உள்ள அனிமேஷன்கள் மற்றும் UI அம்சங்கள் மட்டும் இதில் இல்லை. இத்துடன் டேட்டா சேவர் பயன்முறை உள்ளது, இந்த சேவைமுறை பயனர்கள் தேர்வு செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களைத் மட்டும் டவுன்லோட் செய்கிறது.

அசல் பயன்பாட்டு செயலி போலவே, லைட் பதிப்பில் பின்னூட்டத்திற்கு நைட்மோட் சேவை மற்றும் டிவீட் புக்மார்க்குகளை சேமிக்கும் வசதியை வழங்குகிறது. இன்று தொடங்கி, டிவிட்டர் லைட் செயலி புஷ் நோட்டிபிகேஷன் சேவை மற்றும் லைட் செயலியில் பிளஸ் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் தொடரிட்ட டிவீட்ஸை இடுகையிட முடியும்.

இந்த புதிய ட்வீட்டர் லைட் செயலி கானா, குவாத்திமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜோர்டான், கென்யா, லெபனான், மொரோக்கோ, நிகராகுவா, பராகுவே, ருமேனியா, துருக்கி, உகாண்டா, உக்ரைன், உருகுவே, அர்ஜென்டீனா, பெலாரஸ், ​​டொமினிகன் குடியரசு, யேமன் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ட்ராய்டு டிவிட்டர் லைட் வெறும் 3MB அளவில் வருகிறது மற்றும் இதை கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.