இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை காப்பியடிக்கும் யூடியூப்! பிரபல வசதி அறிமுகம்!

0
யூடியூப்
யூடியூப்

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோக்கள் பகிரும் தளமான யூடியூப், மற்ற பிரபல சமூக வலைதளங்களை போலவே ஒரு நாள் முழுவதும் இருக்கக்கூடிய 24 மணி நேர ஸ்டோரிஸ் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆண்ராய்டு வோர்ல்டின் அறிக்கையின் படி, யூடியூப் நிறுவனம் இந்த புதிய வசதியை குறிப்பிட்ட சில ஆண்ராய்டு பயனர்களுக்கு மட்டும் பரிசோதித்து வருகிறது. ” இப்போதைக்கு வெகு சில பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். அதே நேரம் மற்ற பயனர்களால் ஸ்டோரீஸ்-ஐ பார்க்கமுடிந்தால் கூட, தங்களின் ஸ்டோரீஸை பதிவேற்றம் செய்து பிரசுரிக்க முடியாது” என்கிறது அந்த அறிக்கை.

ஆண்ராய்டு வோர்டு இணையதளம் வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் பார்த்தால், ஹோம் பக்கத்தின் மேல் பகுதியில் சிவப்பு நிற வட்டங்களாக ஸ்டோரீஸ் தோன்றும்.

இந்த முடிவானது இன்ஸ்டாகிராம்-ஐ பார்த்து ஆச்சர்யப்பட்டு எடுத்த முடிவு போல தெரித்தாலும், தினமும் அதிகபட்ச எண்ணிக்கையில் 400 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் ஸ்டோரீஸ் வசதியை பயன்படுத்தும், பயனர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கான தனி செயலியான ஐ.ஜி.டி.வி-யால் கவரப்பட்டு எடுக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட, வளர்ந்து வரும் இணையதள நட்சத்திரங்கள், கலைஞர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மூலம் கிடைக்கும் வீடியோக்களை பிரபலத்தில் இடம்பெற செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ள ஐ.ஜி.டி.வி செயலி, நேரிடையாக கூகுளுக்கு சொந்தமான யூடியூப் உடன் போட்டி போடுகிறது. இது போன்ற புதிய அம்சங்கள் வர வர, யூடியூப்-ம், இன்ஸ்டாகிராமும் மற்றொரு புறம் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்.

இந்த வாரத்தின் துவக்கத்தில், யூடியூப் தனது ஆண்ராய்டு செயலிக்கான ‘ டார்க் தீம்’-ஐ வெளியிட்டுள்ளது. ஐஓஎஸ்-ல் அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு ஆண்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ராய்டில் செயல்படத்துவங்கியுள்ள இந்த டார்க் மோட் வசதியானது, சில கூகுள் கருவிகளிலும் கிடைக்கிறது. உங்கள் போனில் இருந்து யூடியூப்-ஐ பயன்படுத்தும் போது, இந்த புதிய அம்சத்திற்கான செட்டிங்ஸ்-ஐ, யூடியூப் செட்டிங்ஸ்ல் உள்ள ஜெனரல் பகுதியில் காணலாம். இந்த புதிய அம்சமானது எப்போதிருந்து நிரந்திரமாக செயல்படத்துவங்கும் என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் இந்த வசதியை அனைவருக்கும் வெளியிடுவதற்கு முன்னதாக இது நிகழலாம்.

யூடியூப் நிறுவனத்தின் கடந்த அரையாண்டு செயல்பாடுகளைப் பற்றி அதன் சி.ஈ.ஓ சூசன் வோஜ்கிகி கூறுகையில்,யூடியூப்-ஐ ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.9 பில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 180 மில்லியன் மணி நேரத்திற்கும் அதிகமாக டிவி திரைகளில் யூடியூப் பயனர்களால் பார்க்கப்படுகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.