பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான் வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் தற்சமயம் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை சோதனை அடிப்படையில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இந்த புதிய வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரே சமயத்தில் நான்ன பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். மேலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ் செயலியில் ஒரு வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் செய்யவும்.

வழிமுறை-2:

அடுத்து add particioant பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களை சேர்க்கலாம். பின்பு எளிமையாக நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை அதில் இருக்கும் சர்ச் பாக்ஸ் மூலம் தேர்வு செய்ய முடியும்.

வழிமுறை-3:

குறிப்பாக க்ரூப் வாய்ஸ் அல்லது க்ரூப் வீடியோ கால் வரும் போது உங்கள் ஸ்மார்ட்போன் திரையின் அழைப்பில் பார்க்க முடியும். பின்பு க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.

வழிமுறை-4:

க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் பொது கான்டாக்ட்-ஐ எடுக்கும் வசதி கிடையாது, பின்பு கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்டரியை பார்க்கும் வசதியைக் கூட வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது.

வழிமுறை-5:

க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது. இந்த க்ரூப் வீடியோ கால் மறறம் வாய்ஸ் கால் அம்சம் அடுத்த சில நாட்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here