தற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

0
Wifi
New Wifi System

தற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெர்தர்லாந்து இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.

மேலும் ஓரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதன் இதன் மூலம் கண்டறிந்தனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஓளிக்கறைகள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால், இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை எனவும் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.