கூகுளிடம் இருக்கும் உங்களது லொகேஷன் டேட்டா கண்டறிந்து அவற்றை அழிப்பது எப்படி?

0
google my activity
google my activity

உங்களின் ஸ்மார்ட்போனில் லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், உங்களது லொகேஷன் டேட்டாவை கூகுள் பதிவு செய்யும்.

அவ்வாறு உங்களது லொகேஷன் டேட்டாவை முடிந்தவரை பாதுகாக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம். கவலை வேண்டாம், ஏனெனில் ஸ்மார்ட்போனில் இணையத்தை ஆக்டிவேட் செய்தாலே உங்களின் சாதனம் ஐ.பி. முகவரியை கொண்டிருக்கும், இதன் மூலம் டிராக் செய்துவிட முடியும்.

மேலும் ஸ்மார்ட்போன்கள் செல் டவர்களுடன் இணைவதால், உங்களின் டெலிகாம் நிறுவனத்துக்கும் நீங்கள் சென்று திரும்பும் லொகேஷன் பெரும்பாலும் தெரியும்.

முடிந்தவரை டிராக்கங்கை தடுக்க

எவ்வித சாதனங்களிலும் பிரவுசரை திறந்து myactivity.google.com என்ற இணைய முகரியை தேட வேண்டும். ஏற்கனவே சைன்-இன் செய்யாத பட்சத்தில் சைன்-இன் செய்ய வேண்டும். வடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் மெனுவில் ஆக்டிவிட்டி கன்ட்ரோஸ் (Activity Controls) ஆப்ஷனை க்ளிக் செய்து ‘Web & App Activity’ மற்றும் ‘Location History’ ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் கூகுள் அக்கவுன்ட்-இல் சேமிக்கப்படும் லொகேஷன் நிறுத்தப்படும்.

இவ்வாறு செய்யும் போது கூகுளின் சில சேவைகள் வேலை செய்யாது என கூகுள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படும். இதுபோன்ற சமயத்தில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்றவை பயனற்றதாகவே இருக்கும்.

ஐ.ஓ.எஸ். தளத்தில்:

கூகுள் மேப்ஸ் பயன்படுத்தினால் உங்களது லொகேஷன் செட்டிங்கை செயலியில் இருந்தபடி While Using என்று மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது ஆப் லொகேஷனை பயன்படுத்தவதை நிறுத்தும். இதை செய்ய Settings > Privacy >Location Services ஆப்ஷனில் உள்ள கூகுள் மேப்ஸ்-ஐ க்ளிக் செய்து மாற்றலாம்.

சஃபாரி பிரவுசரில் கூகுள் தவிர்த்து மற்ற பிரவுசர்களை பயன்படுத்தலாம். இதற்கு Settings > Safari > Search Engine ஆப்ஷன்களில் Bing அல்லது DuckDuckGo போன்றவற்றை தேர்வு செய்யலாம். பிரவுசிங் செய்யும் போது லொகேஷனை ஆஃப் செய்ய Settings > Privacy > Location Services > Safari Websites சென்று ‘Never’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சாதனத்தில் முழுமையாகவும் லொகேஷன் சேவைகளை Settings > Privacy > Location Services மூலம் ஆஃப் செய்யலாம். கூகுள் மேப்ஸ் மற்றும் ஆப்பிள் மேப்ஸ் போன்றவை தொடர்ந்து வேலை செய்யும், எனினும் அவர்களுக்கு நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது தெரியாது என்பதால் உங்களுக்கு வழி சொல்ல முடியாது.

ஆன்ட்ராய்டு தளத்தில்:

ஆன்ட்ராய்டு சாதனத்தின் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ‘Security & location’ தேர்வு செய்து கீழ்புறமாக ஸ்கிரால் செய்து ‘Privacy’ ஆப்ஷனில் ‘Location’ க்ளிக் செய்ய வேண்டும்.

இனி ‘App-level permissions’ ஆப்ஷன் மூலம் வெவ்வேறு செயலிகளுக்கான அனுமதியை ஆஃப் செய்யலாம். ஐபோன் போன்று ஆன்ட்ராய்டு தளத்தில் கூகுள் பிளே சேவைகளை நிறுத்த முடியாது, இந்த ஆப்ஷன் மூலமாகவே மற்ற செயலிகளுக்கு உங்களது லொகேஷன் அனுப்பப்படும்.

உங்களது ஆன்ட்ராய்டு சாதனத்தில் ‘Guest’ அக்கவுன்ட் மூலம் சைன்-இன் செய்து கீழ்புறமாக ஸ்வைப் செய்து மீண்டும் டார்சோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நீங்கள் சைன்-இன் செய்யும் சேவைகளை நினைவில் கொள்வது அவசியம். க்ரோமிலும் சர்ச் இன்ஜின்களை மாற்ற முடியும்.

ஏற்கனவே பதிவான லொகேஷனை அழிக்க:

எவ்வித சாதனத்திலும் myactivity.google.com வலைப்பக்கத்தில் லொகேஷன் பின் ஐகான் டீடெயில்ஸ் ஆப்ஷனின் கீழ் இருக்கும். இதை க்ளிக் செய்ததும் புதிய திரையில் From your current location ஆப்ஷன் தெரியும். இதை க்ளிக் செய்ததும் நீங்கள் சென்ற லொகேஷன் விவரங்களை பார்க்கலாம்.

இதனை அழிக்க நேவிகேஷன் பட்டனை க்ளிக் செய்து டெலீட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். சில சமயங்களில் சில இடங்கள் எதிர்பாராத பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக அழிக்க வேண்டும்.